ஈரமான மனதில் காயமாக்கி சென்றவள் நீ தானா.?

Filed under: , by: மஹாராஜா

Orkut Graphics - Love

-


அதெப்படி... நீ மட்டும் அடிக்காமல்,
குத்தாமல் எனது இதயத்தை
காயமாக்கி செல்கிறாய்..?

`````````````````````````````````

சிறு குழந்தைக்கு காலில் வரும்
காயத்தை போல எனக்கும் வருகிறது
காதலில் காயம்...

`````````````````````````````````

நீ முத்தமிட்டு சென்ற இடம்
இன்னும் அழியாத
சுவடாய் என் மனதில்...

`````````````````````````````````

எனது நெஞ்சில் நீ முகம் புதைத்து
அழும் நேரத்தில் காயத்திற்கு
சிறு மருந்து கிடைக்கிறது..

`````````````````````````````````

முதல் நாள் காதல் சொல்ல வந்த நான்
தடுமாறி விழுந்த காயம் தான் நம் காதலின்
முதல் சுவடு...

`````````````````````````````````

4 பின்னூட்டங்கள்..!:

On July 13, 2008 at 6:47 PM , மஹாராஜா said...

:)

 
On July 16, 2008 at 10:46 PM , ராகவன் பாண்டியன் said...

அருமையான கவிதைகள் மஹாரஜா....எதிர்பார்த்திருக்கிறோம் இனிய பதிவுகளுக்கு..

 
On August 7, 2008 at 9:31 AM , மஹாராஜா said...

வாங்க ராகவன்...
நல்லா இருக்கீங்களா..?
உங்கள போலவங்க வந்து சொன்னாதான் கொஞ்சம் மூளைய நல்லா
சொறிஞ்சு எழுத முடியும்..
அடிக்கடி வந்து போங்க.. பிரதர்.

 
On August 7, 2008 at 9:32 AM , மஹாராஜா said...

//மஹாரஜா....எதிர்பார்த்திருக்கிறோம் இனிய பதிவுகளுக்கு..//


அப்ப.. இந்த பதிவு..? [:(]