01.01.2020 அன்றைய தலைப்புச் செய்திகள..

Filed under: by: மஹாராஜா

மல்லாக்கப் படுத்து வீட்டின் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்த நமது நண்பர் ராஜா அவர்கள்் கால எந்திரத்தில் 2020-க்குப் பயணித்தால் என்ன எனத் திடீரென்று தோன்றியது. மூளையைக் கசக்கி அங்கு பத்திரிகைகளில் அவர்் படித்த தலைப்புச் செய்திகளே இவை.

குறிப்பு : இதில் கூறப்படும் செய்திகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல; சிரித்துவிட்டு மறந்துவிடுங்கள்.
தேதி : 01.01.2020

1. ஸ்பைடர்மேன் பாகம் 15 இன்று வெளியீடு
2. ஆஸ்திரேலியா எட்டாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது
3. ஐஸ்வர்யாராயின் ஏழாவது திருமணம் - சல்மான், விவேக், அபிஷேக் பங்கேற்பு
4. பெட்ரோல் விலை சற்றே சரிவு– விலை லிட்டருக்கு ரூ. 999 மட்டுமே
5. சன் டிவியில் "கோலங்கள்" 4,450 வது பாகத்தைத் தொட்டது
6. இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார்
7. திரிஷாவினுடைய இளைய மகள் ரஜினியின் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்
8. எட்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் 95 வயதாகும் கலைஞர் கருணாநிதி
9. நடிகர் தனுஷுக்கும், இயக்குனர் சூர்யாவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது தனியார் பல்கலைக்கழகம்
10. வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட்டது
11. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகப்பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம். அவரது சொத்துமதிப்பு 1,00,00,00,00,00,00,000 கோடி
12. காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் – பிரதமர் ராகுல் காந்தி
13. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்
14. இந்தியாவின் மக்கள்தொகை 220 கோடியை எட்டி மகத்தான சாதனை
15. பிரேமானந்தாவின் அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அவர் நிரபராதி எனக் கூறி விடுவித்தார்
16.டாடா இண்டிகாம் தனது புதிய சலுகையை வெளியிட்டது. பத்துத் தலைமுறைக்கு வேலிடிட்டி உள்ள புதிய ப்ரீபெய்டு கார்டின் விலை ரூ. 69
17. ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பனை. இக்குடைகள் விற்பனையில் ரிலையன்ஸ் முன்னிலை
18. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 220 ஆக விலை குறைந்தது. சென்ற வாரம் அது 230 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது

7 பின்னூட்டங்கள்..!:

On February 28, 2008 at 5:55 PM , பாச மலர் / Paasa Malar said...

ஹா..ஹா..

 
On October 9, 2010 at 2:12 PM , ரிஷி said...

மக்களே, தயவு செய்து அடுத்தவர் எழுதியதை காப்பியடித்து உங்கள் ப்ளாக்கில் போடாதீர்கள்.

ஒரிஜினல் இங்கே...
http://www.nilacharal.com/tamil/jokes/tamil_jokes_331.asp

 
On October 9, 2010 at 3:00 PM , மஹாராஜா said...

அய்யா.....ரிஷி...அவர்களே...
இது என்னுடைய பதிவு என்று நான் எங்கும்
குறிப்பிட்டு சொல்ல வில்லை. எனது நண்பர் ராஜா என்பவர்
என்னிடம் பகிர்ந்து கொண்டதை இங்கு பகிர்ந்து உள்ளேன்..
தயவு செய்து நன்றாக பதிவை படித்திவிட்டு கம்மேன்டினால்
நல்ல இருக்கு....
கருத்துக்கு மிக்க நன்றி.
மீண்டும் வருக.

 
On October 9, 2010 at 5:26 PM , ரிஷி said...

//என்னிடம் பகிர்ந்து கொண்டதை இங்கு பகிர்ந்து உள்ளேன்..//

இது ஒரு "படைப்பு". தனியொருவரின் உருவாக்கம். உங்களிடம் இதை யார் வேண்டுமானாலும் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் பதிவிடுவதற்கு முன் "மூலம்" எங்கேனும் இருக்கிறதா எனப் பார்த்து அதன்பின் பதிவிடுதல் நலம். கூகுளில் தேடினால் எளிதாக கிடைத்துவிடும். ஒருவேளை இதன் "மூலம்" உங்களால் அறியமுடியாவிடில்.. எங்களைப் போன்றவர்கள் சொல்லும்போதாவது தவறை திருத்திக் கொள்ள வேண்டும். உங்கள் செயலை நியாயப்படுத்த நினைக்கும் அளவிற்கு உங்கள் தவறை திருத்திக் கொள்ள நீங்கள் முனைப்பு காட்டவேயில்லையே?? ஏனோ?!!

 
On October 9, 2010 at 5:33 PM , ரிஷி said...

//என்னிடம் பகிர்ந்து கொண்டதை இங்கு பகிர்ந்து உள்ளேன்..//

இது மற்றொருவருடைய "படைப்பு". அவரது உருவாக்கம். பதிவிடுவதற்கு முன் எப்போதுமே இதன் "மூலம்" இருக்கிறதா இல்லையா எனப் பார்த்து அதன்பின் பதிவிடுதல் நலம். உங்களிடம் இதை யார் வேண்டுமானாலும் பகிர்ந்து கொண்டிருக்கலாம். கூகிளில் தேடினால் இதன் "மூலம்" எளிதாகக் கிடைத்து விடும். உங்களால் அப்படி கண்டுபிடிக்க முடியாவிட்டால், எங்களைப் போன்றவர்கள் எடுத்துக் கூறும்போதாவது ப்ளாக்கிலிருந்து நீக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் மூல முகவரியாவது பதிவில் குறிப்பிட வேண்டும். ஆனால் உங்கள் செயலை நியாயப்படுத்துவதில் இருக்கும் துடிப்பு, அதை சரிசெய்வதில் காணோமே? ஏனோ???

உங்களுக்கு என்று இல்லை.. பொதுவாக அனைவருக்குமே சொல்கிறேன். எங்கேனும் ஒரு கட்டுரையை அல்லது படைப்பை காப்பி பேஸ்ட் செய்து மெயிலில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அதன் மூல முகவரியையும் சேர்த்துப் பகிருங்கள். இது நீங்கள் அந்தப் படைப்பாளிக்கு தெரிவிக்கும் ஆதரவாகும். இதுதான் தார்மீகமும் ஆகும்.

நான் சொல்வதில் ஏதேனும் பிழையிருக்கிறதா?

 
On October 12, 2010 at 4:55 PM , மஹாராஜா said...

தோழா... உமது கூற்றை நான் மதிக்கின்றேன்..
என்னுடைய அறியாமையை எண்ணி நான் வருந்துகிறேன்.
எனக்கு அப்படி தோன்றவே இல்லை.. அப்படி தேடினாலும்
நிறைய இடத்தில் இதுபோன்று கிடைப்பதால் யாருடையது என்ற குழப்பமும்
சில நேரங்களில் தோன்றுகிறது.. அப்பதிப்பு உங்களுடயாதெனின் தங்கள்
பெயரை அங்கு குறிப்பிடுவதில் எந்த ஐயமும் இல்லை எனக்கு.. ஏனெனில்
நானும் ஒரு படைப்பாளி... எனக்கும் தெரியும்....அதனால் தங்களிடம்
மன்னிப்பு கோருகிறேன்.. இப்பதிவை உங்களின் அடுத்த பின்னோட்டம்
கிடைத்த பின்பு நீக்கிவிடுகின்றேன்.. நன்றி....

தோழமையுடன்,
மஹா..

 
On October 12, 2010 at 4:59 PM , ரிஷி said...

புரிந்து கொண்டமைக்கு நன்றி மஹா..
பதிவை நீக்க வேண்டாம். இதைப் படிப்பவர்கள் அதை உணர்ந்து கொள்ளட்டும்.
மிக்க நன்றி.