
இதோ இன்றும் ஒரு ரசனையற்ற மரக்கட்டையை
போல் நகர்கிறது எனது வாழ்க்கை பயணம்..
மரணம் வெகு அருகில் தான் உள்ளது என்பதை
ஒவ்வொரு முறையும் உணர்த்தி செல்கிறது
உனது புன்முறுவல் சிரிப்பின் நினைவுகள்....
****************

நாட்கள் கடந்து பயணித்து செல்கின்றன..
ஒரு நீண்ட பயணத்தின் போது உன் நினைவை
அழைத்து சிறிது கண்ணிருடன் நான் சொன்ன
வார்த்தை "இப்பிரிவு நிரந்தரமற்றதாகவே இருக்கட்டும்.."
************************

மாதங்கள் பல கழிந்து ஒரு மாலை பொழுதில்
உன்னிடம் இருந்து வரும் தொலைபேசி
அழைப்பினை வேண்டுமென்றே துண்டித்த
பிறகு இருவரும்..
மௌனத்தினால்..திட்டிகொண்டோம்
அவர் அவர் மனதிற்குள்..
********************.
3 பின்னூட்டங்கள்..!:
miga arumai thozharey...ungal padaippugal thodara vaazhukkal
nice ya..
arumai mahaa