நமது கண்களும் நினைவும் மீண்டு
உயிர்த்தெழும் வரை போரிட்டு கொண்டே
இருப்பேன் எனது இதழ்களால்.....
பார்ப்போம் வெற்றி யாருக்கு கிட்டும் என்று....!.!..!
உனது ஸ்பரிசம் தொட்டு எனது காதலை
வெளிப்படுத்திய இடம்...என் காதல்
அழியவில்லை என்பதற்கு இதைவிட
வேறென்ன சாட்சி வேண்டும் எனக்கு...
போடி....
உரையாடலின் உச்சத்தில் இருக்கும் போது
என்னை திசை மாற்றி விட்டுவிட்டு நீ
கொடுக்கும் முத்தம் எல்லாம் இன்று
வசை பாடிவிட்டு திசை மாறி போனது.. ஏனடி...?
புரியவில்லை எனக்கு உன் கோபம்...
இது நிரந்தரமற்றதாகவே இருக்கட்டும்...
இயலாமையின் வலியின் உச்சத்தில்
இருக்கும் என் மனது அதன் விரக்தியை
என்னுள் இருந்து குருதியை வெளியேற்றி
அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறது... நான்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்...

அன்று உனக்காக நான் வாங்கிய வெள்ளை
ரோஜா இன்றும் என் கையில்....சிறு மாற்றம்
வர்ணம் மட்டும் சிகப்பாய் மாறியுள்ளது.
இன்னும் சில நேரங்களில் அதனை பற்றி
இருக்கும் எனது கரமும் மாற தொடங்கிவிடும்..
3 பின்னூட்டங்கள்..!:
அழகான வரிகள். தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://www.newspaanai.com/easylink.php
\\புரியவில்லை எனக்கு உன் கோபம்...
இது நிரந்தரமற்றதாகவே இருக்கட்டும்...\\
Nice....!
wow ..choo sweet...fantastic...
kadhalin inimayai miga algaaga vaditthulleergal...