நமது முதல் சந்திபிற்க்கு இந்த
அலை தான் முதல் சாட்சியாக வைக்கிறேன்..
என் காதல் டைரியில்..
உன்னை யார் அன்று அந்த அலையில்
காலை நனைக்க சொன்னது.. பார்த்தாயா...?
இன்று அது தினமும் உன்னை தேடி கரை வரைக்கும்
வந்து செல்கிறது... அடி பாவி..அந்த அலையையே...
அலைய வைத்து விட்டாயே..என்னை பொறுத்த
வரை.. அலையின் காதலும்.. என்னை போல் தான்...
அது என்னவோ தெரியவில்லை... கடற்கரையில் நான்
உனக்கு கொடுத்த முத்தம் எல்லாம்.. இன்று எனக்கு
இந்த அலை கொடுக்கிறது.. நான் மட்டும் தனிமையில்.
உனது காதலன்.......அலையுடன்.
ஆண் அலையும்.. பெண் அலையும்..
ஒன்றை ஒன்று பிடித்து கொள்ள ஓடி பிடித்து
விளையாடியது போல்.. நாமும் விளையாடிய காலங்கள்..
எங்கே..? ஞாபகம் இருக்கிறதா உனக்கு..?
.
6 பின்னூட்டங்கள்..!:
அழகான வரிகள்
வாழ்த்துகள்.
அழகான வரிகள்
வாழ்த்துகள்.
கருத்துக்கும்.. வாழ்த்துக்கும்... மிக்க நன்றி..தோழியே...
அண்ணா உங்கள் பதிவெல்லாம் தமிழ்மணத்திற்கு அனுப்பிட்டேன். பதிவு போட்டதும் தமிழ்மணத்திற்கு அனுப்ப மறக்காதீங்க அண்ணா..!!
:-)
உங்கள் அன்புக்கும்.. வருகைக்கும் மிக்க நன்றி..
ஆமாம்.. அது எப்படி தமிழ்மணத்தில் இணைப்பது..?
கொஞ்சம் சொல்லுங்களேன்.. ஒரு வாரமாக நானும்
தேடிகிட்டு இருக்கேன்.. பதில் கிடைக்கல..
பிளிஸ்.. கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.
வருகைக்கு நன்றி..
என்றும் தோழமையுடன்..
மஹாராஜா.க.
அண்ணா உங்க பதிவுகளுக்கு மேல் ஒரு டூல் பார் இருக்கில்ல, அது நீங்க பதிவுப் போட்டதும் "அனுப்பு" என்கிற பட்டனோடு இருக்கும். அதை நீங்க க்ளிக் பண்ணாப் போதும். அதுவே உங்கப் பதிவ தமிழ்மணத்தில் இணைச்சிடும்.